உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  தரமற்ற குடிநீர் குழாய் பதிப்பு ஒரு மீட்டருக்கு 3 இடத்தில் ஒட்டு

 தரமற்ற குடிநீர் குழாய் பதிப்பு ஒரு மீட்டருக்கு 3 இடத்தில் ஒட்டு

திருப்புவனம்: திருப்புவனத்தில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் தரமற்ற குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்ட தால் அடிக்கடி குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. திருப்புவனத்தில் கடந்த இரு ஆண்டுகளாக 16 கோடி ரூபாய் செலவில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் புதிய குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ் சாலையை ஒட்டி குழாய்கள் பதிக்கப்பட்டுள்ள நிலையில் தெருக்களிலும் கருப்பு ரப்பர் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் தரமற்ற குழாய்கள் பதிக்கப்பட்டதால் அடிக்கடி குடிநீர் குழாய் சேத மடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. புதிய குழாய்கள் பதிக்கப்பட்டால் அழுத்தம் காரணமாக உடைப்பு ஏற்படுவது வழக்கம், ஆனால் ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் குழாய்கள் சேத மடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. புத்தம் புதிய குழாய்கள் அடுத்தடுத்து சேதமடைந்ததால் அதன் தரம் குறித்த கேள்வி எழுந்துள்ளது. திருப்புவனம் இந்திரா நகரில் ஒரு மீட்டர் தூரமுள்ள கருப்பு குழாயில் மூன்று இடங்களில் உடைப்பு ஏற்பட்டு ஒட்டு போடபட்டுள்ளது.புதிய குழாய்களே சேத மடைவதால் வரும் காலங்களில் நீண்ட நாட்களுக்கு அதனை பயன்படுத்த முடியுமா என கேள்வி எழுந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் திருப்புவனம் நகர்ப்பகுதியில் பதிக்கப்பட்ட குழாய்களை ஆய்வு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்