உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காளையார்கோவிலில் அறுவை சிகிச்சை மையம்

காளையார்கோவிலில் அறுவை சிகிச்சை மையம்

சிவகங்கை: காளையார்கோவிலில் கார்த்திக் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அறுவை சிகிச்சை மையத்தை டாக்டர் காசிராஜன் திறந்து வைத்தார்.காளையார்கோவில் வி.ஐ.பி., நகரில் கார்த்திக் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அறுவை சிகிச்சை மையம் திறக்கப்பட்டது. டாக்டர் மணிவண்ணன் தலைமை வகித்தார். டாக்டர் கார்த்திக்ராஜன் வரவேற்றார். டாக்டர் காசிராஜன் மருத்துவமனையை திறந்து வைத்தார். சாந்தி, ஷாலினிஉள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மருத்துவமனையில் பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் அறுவை சிகிச்சை, சிறுநீரக மருத்துவம், சிறுநீரக அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு சிகிச்சை, பிளாஸ்டிக் லேசர் சிகிச்சை, நரம்பியல் அறுவை சிகிச்சை, மனநல கிகிச்சை, டயாலிசிஸ், புற்றுநோய் கண்டறிதல், புற்றுநோய் சிகிச்சை, குரல் வளை சிகிச்சை, முழங்கால் மற்றும் இடுப்பு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைகள், எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், ரத்த பரிசோதனை மையம் உள்ளிட்ட அனைத்து மருத்துவ சேவையும் 24 மணி நேரமும் செயல்படும் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை