உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / துாய்மை பாரத இயக்க திட்டம் சிவகங்கைக்கு 350 இ-- ரிக் ஷா

துாய்மை பாரத இயக்க திட்டம் சிவகங்கைக்கு 350 இ-- ரிக் ஷா

திருப்புவனம் : மத்திய அரசின் துாய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ், கிராம ஊராட்சிகளில் குப்பைகள் சேகரிக்க, 350 இ- ரிக் ஷாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. சுற்றுப்புற சூழுலை பாதிக்காத வகையில் பேட்டரியினால் இயக்கப்படும் இந்த இ- - ரிக் ஷாக்கள் எளிதில் சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த வாகனத்தை இயக்க டிரைவிங் லைசென்ஸ் தேவையில்லை. ரூ.2.40 லட்சம் மதிப்புள்ள ரிக் ஷாக்கள் ஒவ்வொரு ஊராட்சிக்கும் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் 12 ஊராட்சி ஒன்றியங் களில் உள்ள கிராம ஊராட்சிகளில் குப்பைகள் சேகரிக்க 350 வண்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் திருப்புவனம் ஊராட்சி ஒன் றியத்திற்கு உட்பட்ட 45 ஊராட்சிக்கு 33 ரிக் ஷாக்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ