மேலும் செய்திகள்
புரவி எடுப்பு திருவிழா
18-May-2025
காரைக்குடி: காரைக்குடி கூத்தலுார் தேர்பாருடைய அய்யனார், பெரியநாயகி அம்மன், அடைக்கலம் காத்தவள் கோயில் தேர் திருவிழா மற்றும் புரவி எடுப்புத் திருவிழா மே 20ல் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 28ஆம் தேதி தேரோட்டம் நடந்தது.திருவிழாவின் கடைசி நாளான, 10ம் நாள் திருவிழாவை முன்னிட்டு, மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் புரவி எடுப்பு விழா நடந்தது. கோயில் முன்பு 3 குதிரைகள் 5 காளைகளை வைத்து சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, கிராம மக்கள் புரவிகளை தூக்கிச் சென்று, அய்யனார் கோயிலில் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
18-May-2025