உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டிஜிட்டல் வாக்கி டாக்கிகள் வழங்க தமிழக அரசு தீவிரம்: போலீசார் நிம்மதி

டிஜிட்டல் வாக்கி டாக்கிகள் வழங்க தமிழக அரசு தீவிரம்: போலீசார் நிம்மதி

திருப்புவனம்:தமிழகம் முழுதும் போலீஸ் ஸ்டேஷன்களில் பயன்பாட்டிலுள்ள பழைய மாடல் வாக்கி டாக்கிகளுக்கு விடை கொடுத்து விட்டு புதிய டிஜிட்டல் வாக்கி டாக்கி வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் போலீசார் நிம்மதியடைந்துள்ளனர்.தமிழகம் முழுதும் போலீசாருக்கு தகவல் தொடர்புக்காக ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் போலீசாரின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாக்கி டாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன.சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, சிவகங்கை, திருப்புத்துார், தேவகோட்டை, காரைக்குடி உட்கோட்டங்களுக்குட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் 250 வாக்கி டாக்கிகள் பயன்பாட்டில் உள்ளன.வாக்கி டாக்கிகள் மூலம் பேசும் போது அந்த பேச்சு மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்கி டாக்கிகளிலும் கேட்பது வழக்கம். தற்போது புழக்கத்தில் உள்ள வாக்கி டாக்கிகள் குறிப்பிட்ட இடங்களில் செயல்படாது. பல நேரங்களில் கரகர சப்தத்துடன் தான் இருக்கும். இதைதவிர்க்க போலீசாருக்கு டிஜிட்டல் வாக்கி டாக்கிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.டிஜிட்டல் வாக்கி டாக்கியில் இன்ஸ்பெக்டர் மற்றும் டி.எஸ்.பி., என குறிப்பிட்ட இருவர் மட்டும் அலைபேசி போல பேசிக் கொள்ள முடியும். மற்றவர்களுக்கும் கேட்காது. மிக அவசியமான கலவர நேரங்களில் மாவட்ட எஸ்.பி., குறிப்பிட்ட அதிகாரிகளை மட்டும் தொடர்பு கொண்டு உத்தரவிட முடியும். டிஜிட்டல் வாக்கி டாக்கியில் இருப்பிடம் குறித்து அறிய முடியும், வீட்டில் இருந்து கொண்டே சம்பவ இடத்தில் இருப்பது போன்று செயல்பட முடியாது. உயர் அதிகாரிகள் குறிப்பிட்ட அதிகாரி எங்கிருக்கிறார் என அறிய முடியும், நவீன தொழில் நுட்பத்துடன் செப்டம்பருக்குள் டிஜிட்டல் வாக்கி டாக்கிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி