உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஹிந்தியை திணிக்க முயற்சித்தால் தமிழக அரசு அதை எதிர்க்கும்: அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி

ஹிந்தியை திணிக்க முயற்சித்தால் தமிழக அரசு அதை எதிர்க்கும்: அமைச்சர் பெரியகருப்பன் பேட்டி

சிவகங்கை; 'ஹிந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சித்தால், அதை தடுக்கும் விதத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படும்,' என சிவகங்கையில் நடந்த முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி துவக்க விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: தமிழகத்தில் காலை உணவு திட்டத்தின் கீழ் 18 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயன் பெறுகின்றனர். செப்., 12 வரை முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் 5 பிரிவுகளில் நடத்தி, வெற்றி பெறுவோருக்கு ரூ.37 கோடி பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. பள்ளி மாணவிகளுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களுக்கு தகுந்த தண்டனையை பெற்றுத்தருவதில் முதல்வர் ஸ்டாலின் கவனமுடன் செயல்படுகிறார். தெற்கு ரயில்வே நிர்வாகம் மூலம் மத்திய அரசு அனைத்து இடங்கள், ரயில்களில் ஹிந்தியில் எழுத வேண்டும் என கேட்டதற்கு, அனைத்து வகையிலும் மத்திய அரசு ஹிந்தி மொழியை திணிக்க வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளனர். அதை தடுத்து நிறுத்துவதிலும், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு,முனைப்புடன் ஈடுபடும். அமைச்சர் டி.ஆர்.பி., ராஜாவின் மகன், அதலடிக் விளையாட்டில் பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையிடத்திடம் 'பதக்கம்' பெற மறுத்து விட்டது குறித்து கேட்டபோது, கவர்னர் வழங்கிய பட்டத்தை சில மாணவர்கள் வாங்காமல் சென்றது போன்று தான், அண்ணாமலை கொடுத்த போதும் பதக்கத்தை அமைச்சர் டி.ஆர்.பி., ராஜாவின் மகன் வாங்காமல் சென்றுள்ளார். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை