டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை:சிவகங்கையில், 21 ஆண்டு பணிபுரியும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட தலைவர் திருமாறன் தலைமை வகித்தார். மாநில சம்மேளன பொது செயலாளர் கே.திருச்செல்வம், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் ஏ.சேதுராமன் ஆகியோர் பேசினர். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் வீரையா, துணை பொது செயலாளர் முருகன், மாவட்ட செயலாளர் தட்சிணாமூர்த்தி, மின்ஊழியர் மத்திய கூட்டமைப்பு மாநில செயலாளர் உமாநாத், டாஸ்மாக் ஊழியர் சங்க ராஜ்குமார் உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.