உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / டாஸ்மாக் ஊழியர் சங்க கூட்டம்

டாஸ்மாக் ஊழியர் சங்க கூட்டம்

சிவகங்கை; சிவகங்கையில் டாஸ்மாக் ஊழியர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் குமார் தலைமை வகித்தார். மாநில சம்மேளன தலைவர் முருகன், மாவட்ட செயலாளர் திருமாறன், பொருளாளர் ராஜ்குமார், மெய்யப்பன் பங்கேற்றனர்.2023 மார்ச் 3 ம் தேதி சமூக விரோதிகள் மதுக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசினர். அங்கிருந்த விற்பனையாளர் அர்ச்சுணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த விற்பனையாளர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். ஆனால் விற்பனையாளர் இறந்து 3 ஆண்டுகளை கடந்த போதும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையை வாங்கி கொடுக்க மாவட்ட அதிகாரிகள் எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்றும் இதனை கண்டித்து ஜூன் 24 அன்று கலெக்டர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ