உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மின்சாரம் தாக்கி மாணவன் பலி எதிரொலி பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் சமரசம் செய்த ஆசிரியர்கள்

மின்சாரம் தாக்கி மாணவன் பலி எதிரொலி பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் தயக்கம் சமரசம் செய்த ஆசிரியர்கள்

காரைக்குடி: காரைக்குடி அருகே அரசு பள்ளியில் மின்சாரம் தாக்கி பள்ளி மாணவர் பலியானதால் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்கியதால் ஆசிரியர்கள் சமாதானம் செய்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா பத்தரசன்கோட்டையை சேர்ந்தவர் கைலாசம் மகன் சக்தி சோமையா வயது 14. காரைக்குடி அருகே சாக்கோட்டை பொய்யாவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் மின்சாரம் தாக்கி ஜன. 24 அன்று உயிரிழந்தார். உடலை வாங்க மறுத்து பெற்றோர், உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் பெரிய கருப்பன், கலெக்டர் ஆஷா அஜித் அவர்களை சமாதானம் செய்தனர். இந்நிலையில் நேற்று மீண்டும் பள்ளி திறக்கப்பட்டது. 106 மாணவர்கள் படித்து வரும் பள்ளியில் நேற்று 40 மாணவர்கள் மட்டுமே வந்தனர். பள்ளியில் போதிய பாதுகாப்பு இல்லை என பெரும்பாலான பெற்றோர்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை. மேலும் மாணவர் இறப்புக்கு காரணமான ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மின் இணைப்புகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். கல்வி அதிகாரிகள் மின் இணைப்புகளை சரி செய்ததோடு பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை