தொழில்நுட்ப கருத்தரங்கம்
திருப்புத்துார்: திருமயம் லேனா விலக்கு மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு தரவியல் துறை சார்பில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் நடந்தது. மவுண்ட் சீயோன் கல்வி குழும தலைவர் பிளாரன்ஸ் ஜெயபரதன் முன்னிலையில் இயக்குனர் ஜெய்சன் ஜெயபரதன் தலைமை வகித்தார். முதல்வர் பாலமுருகன், முதன்மையர் (ஐ.சி.டி) ராபின்சன், கல்வி சார் முதன்மையர் ஸ்ரீநிவாஸன் கருத்துரையாற்றினர். அமேசானின் மென்பொருள் வடிவமைப்பு நிபுணர் அஸ்வின் மாணவர்களுடன் தொழில்துறை அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.