மேலும் செய்திகள்
கர்ப்ப கால சர்க்கரை நோயை எதிர்கொள்வது எப்படி
21-Sep-2025
சிவகங்கை : தீபாவளி பண்டிகைக்காக ரேஷனில் போதிய அளவில் பச்சரிசி வழங்க 1,250 டன் தெலுங்கானா பச்சரிசி, சிவகங்கை மாவட்ட கோடவுன்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் தொடக்க கூட்டுறவு கடன் சங்கம், பாம்கோ, நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 829 ரேஷன் கடைகள் இயங்குகிறது. இக்கடைகள் மூலம் 4 லட்சத்து 21 ஆயிரத்து 829 கார்டுதாரர்கள் பொருட்களை பெறுகின்றனர். இதில், 3 லட்சத்து 67 ஆயிரத்து 629 கார்டுகளுக்கு இலவச அரிசி, மானிய விலையில் சர்க்கரை, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. இவற்றில் 46,337 அந்தியோதயா அன்னயோஜனா திட்ட கார்டுகளும், சர்க்கரை மட்டுமே வாங்கும் கார்டுகள் 2,977 வரை உள்ளன. * தெலுங்கானா பச்சரிசி கார்டுக்கு 7 கிலோ புழுங்கல், 5 கிலோ பச்சரிசி வழங்கப்படுகிறது. தீபாவளிக்காக பச்சரிசி தேவை அதிகரிக்கும் என்பதால் தற்போதே கோடவுன்களில் இருப்பு வைத்து வருகின்றனர். தெலுங்கானா பச்சரிசி 1,250 டன் வரை திருவள்ளூரில் இருந்து வரவழைக்கப்பட்டு, கோடவுனில் இருப்பு வைத்துள்ளனர்.
21-Sep-2025