உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேவகோட்டையில் தற்காலிக மார்க்கெட் தாமதம்

தேவகோட்டையில் தற்காலிக மார்க்கெட் தாமதம்

தேவகோட்டை: தேவகோட்டையில் தற்காலிக மார்க்கெட் இயங்குவதில் தாமதத்தால் பஸ் ஸ்டாண்ட் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. தேவகோட்டை பஸ் ஸ்டாண்டில் இடநெருக்கடியாக இருந்ததால், பஸ் ஸ்டாண்டை ஒட்டிய தினசரி மார்க்கெட்டை அகற்றி அதில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி துவங்கியுள்ளது. பஸ் ஸ்டாண்டில் பழைய கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்தும் பணி மந்த நிலையில் நடக்கிறது. தினசரி மார்க்கெட்டில் கடைகள் வெளியேறாத நிலையில் புதிய கட்டுமானப் பணியும் தாமதமாகிறது. தினசரி மார்க்கெட் புதிதாக கட்டப்பட்டு வரும் நிலையில், தற்காலிக மார்க்கெட்டை சிலம்பணி ஊருணியை சுற்றி அமைக்க நகராட்சியினர் ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டது. தொடர்ந்து நகராட்சி சார்பில் ஊருணியை சுற்றி கடைகளும் அமைக்கப்பட்டு விட்டது. மார்க்கெட் வியாபாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளின் தரை தளத்தை உயர்த்தும் பணி உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். இதனால் தற்காலிக மார்க்கெட்டில் கடைகள் அமைப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தினந்தோறும் மார்க்கெட் எங்கு செயல்படுகிறது என்று தெரியாமல் மக்கள் இரண்டு இடங்களுக்கும் சென்று வருகின்றனர். பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு சில நாட்களில் தற்காலிக மார்க்கெட் செயல்பாட்டிற்கு வரும் என்று வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை