உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் தைப்பூச விழா 

சிவகங்கையில் தைப்பூச விழா 

சிவகங்கை : சிவகங்கையில் தைப்பூச விழாவை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமிக்குசிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள சுப்பிரமணியருக்கு தைப்பூச விழா ஜன., 9ல் தொடங்கியது. அன்று இரவு 7:00 மணிக்கு பரத நாட்டியம்,ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மதியம் பாதயாத்திரை குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 7:00 மணிக்கு சுப்பிரமணியர் தேரோடும் வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளர் வேல்முருகன், ஸ்தானிகம் சந்திரசேகர குருக்கள், பாதயாத்திரை குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை