மேலும் செய்திகள்
அழகாபுரி கண்மாய் மடை சேதம்
11-Nov-2024
சில்லாம்பட்டி மக்கள் எதிர்பார்ப்புதிருப்புத்துார்: திருப்புத்தூர் ஒன்றியம்கண்டவராயன்பட்டியிலிருந்து நல்லிப்பட்டி, சில்லாம்பட்டி வழியாக திருப்புத்துார் என்.புதூர் ரோட்டிற்கு இணைப்புச்சாலை செல்கிறது. இந்த ரோட்டில் சில்லாம்பட்டி அருகில் நெடுமரம் கண்மாயின் கலுங்குப் பகுதி உள்ளது. கண்மாய் பெருகி கலுங்கிலிருந்து நீர் வெளியேறும் போது சில்லாம்பட்டி ரோட்டின் மீது செல்கிறது. இதற்காக அமைக்கப்பட்ட பாலம் தற்போது துார்ந்து விட்டது.கண்மாயிலிருந்து தற்போது குறைந்த அளவில் நீர் வெளியேறும் போதே தண்ணீர் ரோட்டின் மீது கடந்து செல்கிறது. இதனால் மெதுவாக ரோட்டை வாகனங்களில் கடந்து செல்கின்றனர். கூடுதலாக நீர் வந்தால் செல்ல முடியாது. மேலும் இரவில் வாகனங்களில் செல்வதும் சிரமமாகும். இதனால் இந்த ரோட்டில் மேலும் உயரமான குழாய் பதிந்து ரோட்டை சற்றே கூடுதல் உயரமாக்கி ஓடு பாலம் அமைக்க கிராமத்தினர் கோரியுள்ளனர்.
11-Nov-2024