உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குண்டும் குழியுமான மகிபாலன்பட்டி ரோடு

குண்டும் குழியுமான மகிபாலன்பட்டி ரோடு

கண்டவராயன்பட்டி : திருப்புத்தூர் அருகே சேதமடைந்துள்ள கண்டவராயன்பட்டியிலிருந்து மகிபாலன்பட்டி ரோட்டிற்கு செல்லும் இணைப்புச்சாலையை புனரமைக்க கிராமத்தினர் கோரியுள்ளனர்.கண்டவராயன்பட்டியிலிருந்து வேலங்குடிக்கு செல்லும் ரோட்டில் விருசுழியாற்று பாலம் அருகில் விலக்கு ரோடு பிரிகிறது. 1 கி.மீ.க்கு குறைவான நீளமுள்ள இந்த ரோடு மகிபாலன்பட்டிக்கு செல்லப் பயன்படும் குறுக்குச்சாலையாகும். முக்கியசாலையில் சென்று திரும்பாமல் கண்டவராயன்பட்டியிலிருந்து நேரடியாக மகிபாலன்பட்டி செல்லும் ரோட்டில் சந்திக்கிறது. இதனால் மகிபாலன்பட்டி செல்ல இந்த ரோடு இப்பகுதி கிராமத்தினருக்கு உபயோகரமாக உள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக இந்த ரோடு பராமரிப்பின்றி உள்ளது. இதனால் வாகன போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லை. இதனால் குண்டும் குழியுமாக உள்ள இந்த ரோட்டை கிராமத்தினர் புதுப்பிக்க கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை