உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கார் கவிழ்ந்து விபத்து தீ பிடித்ததால் பரபரப்பு

கார் கவிழ்ந்து விபத்து தீ பிடித்ததால் பரபரப்பு

திண்டிவனம், : சென்னை, கூடுவாஞ்சேரி, விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன்,45; இவர் நேற்று காலை ஹூண்டாய் கிராண்ட் ஐ10 காரில் தனது மனைவி சீதாலட்சுமி, உறவினர் மைதிலி ஆகியோருடன் கும்பகோணத்தில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு சென்றுக் கொண்டிருந்தார். காரை பாலசுப்ரமணியன் ஓட்டினார்.மதியம் 2:30 மணிக்கு, கார் திண்டிவனம் புறவழிச்சாலையில் ஜக்காம்பேட்டை சந்திப்பு அருகே வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே உள்ள தடுப்புக் கட்டையை தாண்டி விழுப்புரம் மார்க்க சாலையில் கவிழ்ந்தது. இதில் சீதாலட்சுமிக்கு லேசான காயம் ஏற்பட்டது. காரில் இருந்து மூவரும் வௌியேறியதும், கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.திண்டிவனம் தீயணைப்புத்துறையினரை விரைந்து சென்று தீயை அணைத்தனர். விபத்து குறித்து திண்டிவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ