முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி ஆக.26 முதல் செப்.10 வரை நடக்கும்
சிவகங்கை : முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நாளை (ஆக.,26) முதல் துவங்கி செப்., 10 வரை நடைபெறும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார். கல்லுாரி மாணவருக்கான போட்டி அவர் கூறியதாவது, முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிக்கு இணையதளம் மூலம் பதிவு செய்தவர்களுக்கு நாளை முதல் போட்டிகள் துவங்குகிறது. நாளை மாணவருக்கான தடகளம், மாணவிக்கான இறகு, மேசை, கையுந்து பந்து, கபடி, வளைகோல் பந்து, கூடைப்பந்து, கைப்பந்து, பூப்பந்து போட்டிகள் சிவகங்கை விளையாட்டு அரங்கில் நடைபெறும். மாணவர் கேரம் போட்டி சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளியில் நடக்கும். ஆக., 29 அன்று மாணவர் இறகு, மேடை, கையுந்து, வளைகோல், கூடை, கை, கால், பூப்பந்து போட்டிகள், கபடி ஆகியவை சிவகங்கை விளையாட்டு அரங்கிலும், கேரம் போட்டி சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளியில் நடக்கும். செப்., 2 அன்று மாணவிக்கான கால்பந்து போட்டி சிவகங்கை விளையாட்டு அரங்கிலும், செப்., 4 ல் மாணவிக்கான சிலம்பம், செஸ் போட்டிகள் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் நடக்கும். செப்.,5 ல் மாணவருக்கான சிலம்பம், செஸ் போட்டி செட்டிநாடு பப்ளிக் பள்ளியிலும், செப்., 4 முதல் 6 வரை மாணவர் கிரிக்கெட், செப்.,5 முதல் 6 வரை மாணவிகள் கிரிக்கெட் போட்டி காரைக்குடி செல்லப்பன் வித்யாமந்திர் பள்ளியில் நடக்கும். செப்.,11 அன்று மாணவியர் நீச்சல், செப்.,12 ல் மாணவர் நீச்சல் போட்டி சிவகங்கை விளையாட்டு அரங்கில் நடக்கும். பள்ளி மாணவருக்கான போட்டி செப்., 1 ல் பள்ளி மாணவ,மாணவியர் தளம் சிவகங்கை விளையாட்டு அரங்கிலும், செப்., 2 ல் மாணவிக்கான இறகு, கையுந்து, வளைகோல், கூடை, கை மற்றும் கால்பந்து போட்டிகள், செப்.,3ல் மாணவருக்கான இறகு, கையுந்து, வளைகோல், கூடை, கை, கால்பந்து போட்டிகள் சிவகங்கை விளையாட்டு அரங்கில் நடக்கும். செப்., 2 ல் மாணவர் கோ- கோ, செப்.,3 ல் மாணவியர் கோ- கோ போட்டிகள் காளையார்கோவில் ேஹாலிஸ்பிரிட் பள்ளியில் நடக்கும். அதே போன்று செப்., 2 ல் மாணவர், செப்.,3 ல் மாணவியர் கபடி போட்டி திருப்புத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடக்கும். செப்., 8 ல் மாணவ, மாணவியர் கேரம் சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளி, மாணவியர் நீச்சல் போட்டி விளையாட்டு அரங்கில் நடக்கும். செப்., 10 ல் மாணவர் நீச்சல் சிவகங்கை விளையாட்டு அரங்கிலும், செப்., 3ல் மாணவியர் சிலம்பம், செஸ்போட்டி, செப்., 2 ல் மாணவர் சிலம்பம், செஸ் போட்டி காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் நடக்கும். செப்., 5 ல் மாணவர் கிரிக்கெட், செப்., 5 முதல் 6 வரை மாணவியர் கிரிக்கெட் செப்., 2 ல் மாணவர் மேசை பந்து, செப்., 3 ல் மாணவியர் மேசை பந்து போட்டிகள் காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளியில் நடக்கும். பொது பிரிவினர் போட்டி செப்., 8 ல் பொது பிரிவு ஆண், பெண்களுக்கான தடகளம், இறகு, கையுந்து, கால்பந்து, கபடி போட்டிகள் சிவகங்கை விளையாட்டு அரங்கிலும், கேரம் போட்டி சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளியில் நடக்கும். செப்., 4 ல் பொது பிரிவு பெண்களுக்கான சிலம்பம், செப்., 5 ல் பொது பிரிவு ஆண்கள் சிலம்பம் போட்டிகள்,செப்., 5 முதல் 7 வரை பொதுப்பிரிவு ஆண், பெண் கிரிக்கெட் போட்டியும் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் நடக்கும். மாற்றுத்திறனாளி பிரிவு செப்., 9 ல் ஆண், பெண்களுக்கான அனைத்து விளையாட்டும், செப்.,10 ல் அரசு ஊழியர்களுக்கான அனைத்து போட்டிகளும் சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கும், என்றார்.