ஊருணிச்சுவர் இடிந்ததால் கரையும் இணைப்புச்சாலை
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே ஊருணி தடுப்புச் சுவர் இடிந்ததால் இணைப்புச் சாலை கரையத் தொடங்கியுள்ளது. இவ்வொன்றியத்தில் மதுராபுரி ஊராட்சியில் இருந்து கோபாலபச்சேரி வழியாக பிரான்மலை செல்லும் சாலையில் ராமகரண் ஊருணி உள்ளது. அப்பகுதி மக்களின் முக்கிய குடிநீர், நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் இந்த ஊருணியை சுற்றி 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தடுப்புச் சுவர் உள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் இந்த ஊருணியின் ஒரு பக்க சுவர் இடிந்து உள்ளே விழுந்துள்ளது. இதனால் அருகேயுள்ள தார் சாலை கரைந்து வருகிறது.