உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கல்வித்துறை இளநிலை உதவியாளருக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்

கல்வித்துறை இளநிலை உதவியாளருக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்

சிவகங்கை : ''கல்வித்துறையில் பணிபுரியும் இளநிலை உதவியாளருக்கு ஊக்க சம்பள உயர்வு வழங்க வேண்டும்,'' என, சிவகங்கையில் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில அமைப்பு செயலாளர் கந்தசாமி வலியுறுத்தினார். அவர் கூறியதாவது: இளநிலை உதவியாளர்கள் துறை தேர்வு மூலம் தேர்ச்சிக்கு பிறகு பயிற்சி முடித்து பதவி உயர்விற்கு காத்திருக்கின்றனர். இவர்களுக்கு தற்போது கல்வித்துறை வெளியிட்ட உத்தரவு மனவேதனையை அளிக்கிறது. 2020 மார்ச் 10க்கு முன் தேர்ச்சி பெற்று ஊக்க ஊதிய உயர்வு பெறாத ஊழியர்களுக்கு ஊக்க சம்பள உயர்வு வழங்குவது தொடர்பாக அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களிடம் 2020 முதல் கணக்கு தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் விபரம் கோரப்பட்டு, அதன் விபரங்கள் அரசுக்கு அனுப்பப்பட்டன.ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக வழங்காமல் தற்போது வெளியிடப்பட்ட உத்தரவில் இளநிலை உதவியாளர்களுக்கு ஊக்க சம்பள உயர்வு வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் கணக்குத் தேர்வில் தேர்ச்சி பெற்ற நாளில் இருந்து ஊக்க சம்பள உயர்வு பெறுகின்றனர். ஆனால் கல்வித்துறை இளநிலை உதவியாளர்களை இந்த அரசு வஞ்சிக்கிறது. தேர்வு துறையில் பணிபுரியும் இளநிலை உதவியாளருக்கு சார்நிலை அலுவலருக்கான ஊக்க சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. ஆனால் எங்கள் கோரிக்கை மட்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு உடனடியாக ஊக்க சம்பள உயர்வை வழங்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை