உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கிராவல் மண் விதி மீறி எடுப்பதால அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு

கிராவல் மண் விதி மீறி எடுப்பதால அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு

சிவகங்கை மாவட்டம் திருபுவனம் தேர்வு நிலை பேரூராட்சி ஐந்தாவது வார்டு கவுன்சிலரும்சமூக ஆர்வலருமான எம் பாரத் ராஜா புவியியல் மட்டும் சுரங்கத் துறை கமிஷனர் சிவகங்கை கலெக்டர் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சிவகங்கை கனிம வளம் புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குனர் தாசில்தார் மற்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: சிவகங்கை மாவட்டம், வேம்பங்குடி குருப்பில் பட்டா எண் 1094 கூட்டு பட்டாவில் கண்டுள்ள சர்வே எண் 1 5 8 கண்டுள்ள 6 ஹெக்டர் 99 ஏர்ஸ் புஞ்சை நிலம் மொத்த இடத்தில் 4 ஹெக்டர் 99 ஏர்ஸில் மட்டும் கிராவல் குவாரி நடத்த சிவகங்கை மாவட்ட புவியியல் மட்டும் சுரங்கத்துறை துணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். அதாவது, 20 மாதங்கள் மட்டும் குத்தகைதாரருக்கு அனுமதி வழங்கிய கிராவல் குவாரியில் ஒரு நடை சீட்டில் 3 கன மீட்டர் கிராவவ் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெரிய கனரக வாகனமான டாரஸ் லாரியில் 6 யூனிட் கிராவல் மண் சட்டத்திற்கு புறம்பாக கடத்திச் செல்கின்றனர். மேலும் அரசு அனுமதி பெறாத சர்வே எண்களிலும் கிராவல் மண் திருடப்படுவதால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அனுமதிக்கப்பட்ட ஆழத்தை விட கூடுதலாக கிராவல் மண் தோண்டப்பட்டு வருவதால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லாத நிலையில் உள்ளது. எனவே, சிவகங்கை தாலுகா வேப்பங்குடி குரூப் சர்வே எண் 1 5 8 பகுதி ஒரே சர்வே எண்ணில் இரண்டு முறை கிராவல் குவாரி நடத்த அனுமதி வழங்கியதால் அனுமதித்த ஆழத்தை விட 15 அடி ஆழத்திற்கும் மேலாக கிராவல் மண் தோண்டப்படுவதால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அனுமதி பெறாத சர்வே எண்களிலும் கிராவல் மண் அள்ளுவதால் மேற்கண்ட பகுதியில் உள்ள கன்மாய் வாய்க்கால்களில் தண்ணீர் செல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அனுமதி வழங்கிய கிராவல் குவாரி உரிமத்தை ரத்து செய்தும் சர்வே எண் 1 5 8 பகுதியை தல ஆய்வு செய்து கணிமவளத் திருட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ