உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / போராடி வந்த மறுகால் தண்ணீர்

போராடி வந்த மறுகால் தண்ணீர்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி செட்டியார் குளத்திற்கு மதுரை மாவட்ட கண்மாயின் மறுகால் தண்ணீரை இளைஞர்கள் முயற்சிக்குப் பிறகு கொண்டு வந்தனர்.இப்பேரூராட்சியில் உள்ள செட்டியார் குளம் 20 ஏக்கர் பரப்பு கொண்டது. மழைக்காலங்களில் இக்குளத்திற்கு நீர்வரத்து இருந்தாலும் எப்போதாவது ஒரு சில ஆண்டு மட்டுமே முழுவதும் நிரம்பும். இந்தாண்டு தொடர் மழை பெய்தும் இக்குளம் நிரம்பவில்லை. இதனை தொடர்ந்து அப்பகுதி இளைஞர்கள் 20க்கும் மேற்பட்டோர் மதுரை மாவட்டம் கருங்காலக்குடி அருகே உள்ள புதுக்கண்மாயில் மறுகால் பாய்ந்த தண்ணீரை போராடி இக்குளத்திற்கு கொண்டு வந்துள்ளனர். 5 கி.மீ., தூரம் பெரியாறு கால்வாயில் தண்ணீரை திருப்பி மேடு பள்ளங்களை சரி செய்து மூன்று நாட்களுக்குப் பிறகு செட்டியார் குளம் ஊருணியை தண்ணீர் வந்தடைந்தது. இக்குளம் நிரம்பும் பட்சத்தில் சிங்கம்புணரி நகர் முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இளைஞர்களின் முயற்சிக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ