உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பூண்டு விலை கடும் உயர்வு சிவகங்கையில் கிலோ ரூ.600

பூண்டு விலை கடும் உயர்வு சிவகங்கையில் கிலோ ரூ.600

சிவகங்கை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பூண்டு, இஞ்சி,தக்காளி விலை கிடுகிடு வென உயர்ந்து வருவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.சிவகங்கை மாவட்டத்தில் தீபாவளி நேரம் என்பதால் பூண்டு,இஞ்சி,தக்காளி உள்ளிட்ட காய்கறி விலை மேலும் அதிகரிக்க கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.மாவட்டத்தில், சிவகங்கை,காரைக்குடி, தேவகோட்டை, திருப்புத்துார்,மானாமதுரை பகுதிகளில் தினசரி காய்கறி மார்க்கெட் இயங்குகின்றன. இவை தவிர,வாரச்சந்தையும் ஒவ்வொரு ஊர்களிலும் நடைபெறுகிறது.தேனி,மதுரை,திருச்சி மொத்த மார்க்கெட் மூலம் மாவட்ட சந்தைகளுக்கு 25 முதல் 30 டன் வரை காய்கறி வரத்து இருக்கும்.புரட்டாசியை முன்னிட்டு அசைவ பிரியர்கள் கூட சைவத்தை அதிகளவில் விரும்பி சாப்பிடுவர். இதனால் காய்கறி தேவை அதிகரித்து, வரத்து இல்லாத சூழலில் தேவை அதிகரிப்பதால் விலை உயர்ந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக நேற்று சந்தையில் தக்காளி கிலோ ரூ.70க்கும், சின்ன வெங்காயம் 50, பெரிய வெங்காயம் 50, இஞ்சி கிலோ 150 முதல் 240, உருளை 60, பீன்ஸ் 100, கத்தரிக்காய் 40, கேரட் 70, பாகற்காய் 120, அவரைக்காய் 60, முட்டைகோஸ் 40, காலிபிளவர் 45, வெண்டைக்காய் 40, கருணை கிழங்கு 80, முள்ளங்கி 40, தேங்காய் 25 முதல் 30, வாழைக்காய் 3 காய் 10, பூண்டு 600, நடுத்தர பூண்டு 400, சிறிய ரக பூண்டு 300, இமாச்சல் பூண்டு 460, காஷ்மீர் பூண்டு 400, ராஜஸ்தான் பூண்டு 300க்கு விற்பனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை