மேலும் செய்திகள்
நரிக்குடியில் சீனி அவரை விவசாயம் லாபம்
28-Jul-2025
திருப்பாச்சேத்தி : திருப்பாச்சேத்தி அருகே பிச்சைப்பிள்ளையேந்தலில் இருந்து கட்டனுார் ரோடு வரை விவசாய நிலங்களுக்கு இடையே செல்லும் மூன்று கி.மீ., துாரம் வரை விவசாயிகள் பயன்பாட்டிற்காக 15 வருடங்களுக்கு முன் ஊராட்சி ஒன்றியம் சார்பில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. பெரும்பாலும் திருப்பாச்சேத்தி தெற்கு பகுதி விவசாயிகளே இப்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். விவசாயிகள் இச்சாலையை கடந்து மாரநாடு, சலுப்பனோடை, பழையனுார், தாழிக்குளம் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று வர முடியும். இச்சாலையின் இருபுறமும் வாழை, கரும்பு, தென்னை, மா, நெல் 500 ஏக்கரில் பயிரிடப்படுகிறது. இச்சாலை வழியாக விளைவித்த பொருட்கள் கொண்டு சென்று வந்தனர். சாலை முறையாக பராமரிக்கப்படாததால் உருக்குலைந்து கற்கள் பெயர்ந்து கரடு முரடாக காட்சியளிக்கிறது. தார்ச்சாலை இருந்ததற்கான அடையாளமே இல்லை. வாகனங்கள் சென்று வர முடியாத அளவிற்கு இருப்பதால் விவசாயமும் கேள்விக்குறியாகி வருகிறது. வேறு பாதையும் இல்லை. இதனால் விவசாய பணிகளும் பாதிக்கப்படுகின்றன. பல முறை திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. சின்னையா, விவசாயி: சாலை பழுதடைந்து இருப்பதால் விவசாய பணிகளுக்கு கூலி ஆட்களை அழைத்து வர முடியவில்லை. நீண்ட துாரம் நடந்து வர பலரும் மறுக்கின்றனர். விளைவித்த பொருட்களையும் கொண்டு செல்ல முடியவில்லை, என்றார். முருகன், பிச்சைப்பிள்ளையேந்தல்: இச்சாலை வழியாக எளிதில் திருப்பாச்சேத்தி சென்று வர முடியும், விவசாயத்திற்கு தேவையான பொருட்களை எளிதில் வாங்கி வர முடியும், கிராமப்புற சாலைகளுக்கு நிதி ஒதுக்கி இச்சாலையை புதுப்பித்து தர வேண்டும் என்றார்.
28-Jul-2025