உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காலையில் அமைத்த வேகத்தடை மாலையில் அகற்றிய அதிகாரிகள்

காலையில் அமைத்த வேகத்தடை மாலையில் அகற்றிய அதிகாரிகள்

காரைக்குடி : காரைக்குடி கழனிவாசல் நெடுஞ்சாலை மதுரை திருச்சி அறந்தாங்கி செல்லும் முக்கிய சாலையாக உள்ளது. நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள கழனிவாசலில் வியாழக்கிழமை சந்தையன்று ஏராளமான மக்கள் வந்து செல்வர். அருகில் மீன் மார்க்கெட், ஆடு வதை கூடம் உள்ளது. தற்போது புதிதாக தினசரி மார்க்கெட் கட்டப்பட்டு வருகிறது. அதிக போக்குவரத்து நெரிசல் நிறைந்த இச்சாலையில் நேற்று அதிகாலை புதிதாக வேகத்தடை அமைக்கப்பட்டது. திடீரென்று, மாலையில் இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டது. நெடுஞ்சாலை துறையினர் கூறுகையில்:வேகத்தடையின் உயரம் மற்றும் அகலம் அதிக அளவில் இருந்தது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டி விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. எனவே பெரிய வேகத்தடையை அகற்றிவிட்டு முறையான வேகத்தடை அமைக்கப்பட உள்ளது. என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ