உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  பயன்பாட்டிற்கு வந்த தொட்டி

 பயன்பாட்டிற்கு வந்த தொட்டி

திருப்பாச்சேத்தி: திருப்பாச்சேத்தி போலீஸ் ஸ்டேஷன் எதிரே கூலி தொழிலாளர்கள் பயன்பாட்டிற்காக நான்கரை லட்ச ரூபாய் மதிப்பீட்டில் குளியல் தொட்டி கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்தது. ஆழ்துளை கிணற்றில் உள்ள மோட்டார் பழுது காரணமாக கடந்த நான்கு மாதமாக குளியல் தொட்டியில் தண்ணீர் நிரப்ப முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானதை தொடர்ந்து நேற்று அதிகாரிகள் மோட்டாரை சரி செய்து குளியல் தொட்டியில் தண்ணீரை நிரப்பினர். மீண்டும் குளியல் தொட்டி பயன்பாட்டிற்கு வந்ததால் கூலி தொழிலாளர்கள் மகிழ்ச்சி யடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை