காண்ட்ராக்டர் வீட்டில் திருட்டு: 2 பேர் கைது
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் காண்ட்ராக்டர் சிதம்பரம் 60. இவரது பூர்வீக வீடு கண்டரமாணிக்கத்தில் உள்ளது. நவ.,1ல் கொள்ளை கும்பல் இவரது வீட்டிற்குள் புகுந்து லாக்கரில் இருந்த வைரம் பதித்த 50 பவுன் நகை, 40 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். திருக்கோஷ்டியூர் போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட தேனி மாவட்டம் அல்லிநகரம் சோனிராஜா 58, மதுரை செக்கானுாரணி அழகர்சாமி 35, ஆகியோரை கைது செய்து, நகை, வெள்ளி பொருட்களை மீட்டனர்.