உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துாரில் தேய்பிறை அஷ்டமி விழா

திருப்புத்துாரில் தேய்பிறை அஷ்டமி விழா

திருப்புத்துார் : திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு நேற்று யோகபைரவருக்கு அஷ்ட பைரவ மகா யாகத்துடன் சிறப்பு வழிபாடு நடந்தது. குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் யோகநிலையில் எழுந்தருளியுள்ள பைரவருக்கு அஷ்டமி தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.நேற்று காலை 9:30 மணிக்கு அஷ்ட பைரவ மகாயாகம் பாஸ்கர் குருக்கள் உள்ளிட்ட சிவாச்சாரியார்களால் துவங்கியது. தொடர்ந்து கோ பூஜையும் நடந்தது.பின்னர் யாகசாலை பூஜை முடிந்து பூர்ணாஹூதி தீபாராதனைக்கு பின்னர் யாகசாலையிலிருந்து கலசங்கள் புறப்பாடாகி மூலவர் பைரவருக்கு அபிேஷகம் நடந்தது. பின்னர் யோகபைரவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.மாலை 6:00 மணிக்கு அஷ்ட பைரவ மகாயாகம் துவங்கி, மூலவருக்கு அபிேஷக, ஆராதனைகள் நடந்தன.தேவகோட்டை: கார்த்திகை கால பைரவர் அஷ்டமி எனும் மகா அஷ்டமியை முன்னிட்டு தேவகோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பைரவருக்கு சிறப்பு ஹோமம் அபிஷேக பூஜைகள் நடந்தன.பட்டுக்குருக்கள் நகரில் ஸ்வர்ண பைரவர் கோவிலில் பைரவ அஷ்டமியை முன்னிட்டு அஷ்ட பைரவர் ஹோமம்,சிறப்பு அபிஷேகங்களை தொடர்ந்து அலங்கார பூஜைகள் நடந்தன. நித்திய கல்யாணி கைலாசநாதர் கோவில் ஆகர்ஷண பைரவர் கோவிலில் சிறப்பு அபிேஷக பூஜைகள் நடந்தன.இளையான்குடி: இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் மகாதேவ அஷ்டமி விழாவை முன்னிட்டு காலபைரவர் சுவாமிக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து அபிஷேக,ஆராதனை, பூஜைகள் நடைபெற்றன.நிகழ்ச்சியில் இளையான்குடி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை