சிவகங்கைக்கு போதிய பஸ்கள் இல்லை: படிகளில் பயணம் மேற்கொள்ளும் அவலம் தொடர்கிறது
மானாமதுரை: மானாமதுரையிலிருந்து சிவகங்கைக்கு போதிய பஸ் வசதி இல்லாத காரணத்தினால் மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டு பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.மானாமதுரை சுற்றுவட்டார கிராம பகுதிகளிலிருந்து நூற்றுக்கணக்கான பள்ளி,கல்லுாரி மாணவர்கள் தினமும் மாவட்ட தலைநகரான சிவகங்கைக்கு சென்று வருகின்றனர். காலை 7:00 மணி முதல் 8:30 மணி வரை 300க்கும் மேற்பட்ட மாணவர்களும் 100க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும் சிவகங்கைக்கு சென்று வருகின்றனர்.காலை நேரங்களில் மானாமதுரையில் இருந்து போதுமான பஸ்கள் இல்லாத காரணத்தினால் ஏராளமான மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். பள்ளி,கல்லுாரி மாணவிகள் கூறியதாவது: மானாமதுரை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிவகங்கையில் உள்ள பள்ளி கல்லூரிகளில் படித்து வருகிற நிலையில் மானாமதுரையில் இருந்து காலை நேரத்தில் போதிய பஸ்கள் இயக்கப்படாத காரணத்தினால் வரும் சில பஸ்களில் அனைவரும் பயணம் செய்ய வேண்டிய நிலை. போக்குவரத்துக் கழக அதிகாரிகள் மாணவர்களின் நலன் கருதி மானாமதுரையில் இருந்து சிவகங்கைக்கு காலை நேரத்தில் போதிய அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.