உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் உதவியாளர் முதல் அதிகாரிவரை இல்லை நலத்திட்ட பணிகள் தேக்கம்

ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தில் உதவியாளர் முதல் அதிகாரிவரை இல்லை நலத்திட்ட பணிகள் தேக்கம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில், மாவட்ட அலுவலர் முதல் உதவியாளர் வரை அனைத்து பணியிடங்களும் காலியாக இருப்பதால், இந்த வகுப்பை சேர்ந்த மக்கள் அரசின் திட்டங்களை பெற முடியாமல் தவிக்கின்றனர். சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாக தரைத்தளத்தில் ஆதிதிராவிடர் நல அலுவலகம் செயல்படுகிறது. இங்கு மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலராக இருந்த ஆனந்தி, பணியிட மாறுதல் பெற்று சென்றுவிட்டார். கண்காணிப்பாளர் பணிநிறைவு பெற்று சென்றுவிட்டார். அதேபோன்று கணக்காளர், உதவியாளர் என அனைத்து தரப்பு பதவியிடங்களும் காலியாகவே உள்ளன. இதனால், மாவட்ட அளவில் உள்ள 42 ஆதிதிராவிடர் நல பள்ளி,கல்லுாரி மாணவ,மாணவிகள் விடுதிகளை கண்காணிப்பது, இச்சமூகத்தை சேர்ந்த மக்களுக்கான அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்றுத்தருவதில், இழுபறி நிலை நீடித்து வருகிறது. எனவே அரசு, இம்மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் காலியாக உள்ள அனைத்து அலுவலர் பணியிடங்களை நிரப்பி, இச்சமூகத்தை சேர்ந்த மக்கள், விடுதி மாணவர்களுக்கு உரிய சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் பூமிநாதன் கூறியதாவது, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் உதவியாளர் , கணக்காளர் முதல் மாவட்ட அலுவலர் வரை அனைத்து பணியிடங்களும் காலியாக உள்ளதால், இத்துறை சார்ந்த எந்த ப ணிகளும் நடைபெறவில்லை. இது குறித்து ஆதிதிராவிடர் நலத்துறை கமிஷனருக்கு புகார் அனுப்பியுள்ளேன், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி