உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கீழடி அருங்காட்சியகத்திற்கு பஸ் வசதி இல்லை

கீழடி அருங்காட்சியகத்திற்கு பஸ் வசதி இல்லை

கீழடி: கீழடி அருங்காட்சியகத்திற்கு போதிய பஸ் வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.கீழடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு 2023, மார்ச் 5ல் திறக்கப்பட்டது. அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களை பார்வையிட ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மதுரையில் இருந்து ஏழு கி.மீ., தொலைவில் கீழடி அருங்காட்சியகம் உள்ளது. ஆனால் மதுரையில் இருந்து கீழடி அருங்காட்சியகத்திற்கு எந்த வித பஸ் வசதியும் இல்லை, திருமலை நாயக்கர் மஹாலை பார்த்த பின் அப்படியே திரும்பி சென்று விடுகின்றனர்.கீழடி விலக்கில் எந்த பஸ்சும் நிற்பதில்லை. சிவகங்கையில் இருந்து காஞ்சிரங்குளம் செல்லும் ஒரே ஒரு பஸ் மட்டும் தான் நின்று செல்கிறது. போதிய பேருந்து வசதி இல்லாததாலும், அருங்காட்சியகம் குறித்து எந்த வித தகவலும் மதுரையில் இல்லாததாலும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக உள்ளது. சுற்றுலா பயணிகள் பலரும் சொந்த வாகனங்களிலேயே வந்து செல்ல வேண்டியுள்ளது.எனவே தமிழக சுற்றுலா துறை, தொல்லியல் துறை இணைந்து மதுரையில் கீழடி அருங்காட்சியகம் குறித்து போதிய விளம்பர பலகைகள் வைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை