உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குடிக்க தண்ணீர் இல்லை குழி தோண்டி எடுக்கும் அவலம்

குடிக்க தண்ணீர் இல்லை குழி தோண்டி எடுக்கும் அவலம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் சிரமம் ஆதிதிராவிடர் குடியிருப்பில் குடிக்க தண்ணீர் இல்லாததால் ஆற்றில் குழி தோண்டி தண்ணீர் எடுக்கும் அவலம் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது சிரமம் கிராமம். இங்குள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இவர்களது வீட்டிற்கு குடிநீர் இணைப்பு இருந்தும் தண்ணீர் வருவதில்லை. இதனால் அருகில் உள்ள ஆற்றுப்படுகையில் குழி தோண்டி அதில் ஊறும் நீரை தான் எடுத்து பயன்படுத்துகின்றனர்.இரண்டு மணி நேரம் காத்திருந்தால் தான் ஒரு குடம் தண்ணீர் கிடைக்குமாம். இப்படி கிடைக்கும் ஊற்று நீரையே இங்குள்ள மக்கள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இங்குள்ள ஆண் மற்றும் பெண்கள் தண்ணீர் எடுப்பதற்காக அதிகாலை 4:00 மணிக்கே ஆற்றுக்கு செல்லவேண்டும். அப்படி சென்றால் தான் தண்ணீர் எடுத்து வந்து குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்ப முடியும்.தினசரி ஆற்றுக்கு அதிகாலையே குழந்தைகள் பெண்கள் தண்ணீர் எடுக்க செல்வதால் பள்ளிக் கல்லுாரி செல்வதில் தாமதம் ஏற்படுகிறது.இந்த பகுதி மக்களுக்கு தினசரி குடிநீர் விநியோகம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை