| ADDED : நவ 25, 2025 04:48 AM
திருப்புவனம்: திருப்புவனம் வாரச்சந்தையில் மின் விளக்குகள் எரியாததால் பொதுமக்களும் வியா பாரிகளும் தவிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். திருப்புவனத்தில் செவ்வாய் அதிகாலை 5:00 முதல் 8:00 மணி வரை ஆடு, கோழி சந்தையும், அதன்பின் காய்கறி சந்தை இரவு 10:00 மணி வரையிலும் நடக்கும், வாரச்சந்தையினுள் 200க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகள் அமைத்து பொருட்கள் விற்பனை செய்வார்கள். பெரும்பாலும் கிராம மக்கள் மாலையில் தான் காய்கறிகள் வாங்க வருவார்கள் வாரச்சந்தையினுள் மொத்தம் எட்டு இடங்களில் உயர் கோபுர விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஏழு எரிவது இல்லை. ஒரே ஒரு விளக்கை நம்பியே பொதுமக்களும், வியாபாரிகளும் உள்ளனர். மறுநாள் புதன்கிழமை அதிகாலை தொடங்கி 6:00 மணி வரை மாட்டுச்சந்தை இருட்டினுள் நடைபெறுகிறது. எனவே பேரூராட்சி நிர்வாகம் வாரச்சந்தையினுள் விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எரியாத உயர் கோபுர விளக்கு மானாமதுரை: இடைக்காட்டூரில் திரு இருதய ஆண்டவர் சர்ச் மற்றும் இடைக்காடர் சித்தர் கோயில் உள்ளது. இப் பகுதியை அரசு சுற்றுலாத்தலமாக அறிவித்துள்ளது.இங்குள்ள சர்ச்சில் மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் திருப்பலி மற்றும் இடைக்காடர் சித்தர் கோயிலில் மாதம்தோறும் நடைபெறும் சிறப்பு வழிபாடுகளில் ஆயிரக்கணக்கான பக் தர்கள் கலந்து கொள்வர். சர்ச் எதிர்புறம் போதிய மின்விளக்கு இல்லாத காரணத்தால் சில ஆண்டு களுக்கு முன் அ.தி.மு.க., எம்.பி., யாக இருந்த செந்தில்நாதன் தொகுதி நிதியில் இருந்து உயர் கோபுர விளக்கு அமைக்கப்பட்டது. இந்த விளக்கு 10 மாதங்களாக எரியாமல் இருட்டில் மூழ்கியுள்ளது. இடைக்காட்டூர் கிராமத்தில் போதிய அடிப்படை வசதி இல்லாத நிலையில் ஆங்காங்கே சாக்கடை மற்றும் குப்பை தேங்கியுள்ளது. உயர் மின் கோபுர விளக்கை பழுது பார்க்கவும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.