தேவகோட்டை நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் புகார் தரலாம்
சிவகங்கை: தேவகோட்டையை தலைமை இடமாக கொண்டு இயங்கி வந்த ட்ரூவே பிஸ்னஸ் செர்விஸ் பிரைவேட் லிமிட் மற்றும் அதனுடன் இணைந்த 7 நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவர்கள் சிவகங்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கலாம் என இன்ஸ்பெக்டர் மாரிஸ்வரி தெரிவித்தார்.அவர் கூறுகையில், தேவகோட்டையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ட்ரூவே பிஸ்னஸ் செர்விஸ் பிரைவேட் லிமிட் மற்றும் அதனுடன் இணைந்த 7 நிறுவனங்கள் பொது மக்களிடம் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் என ஆசை வார்த்தை கூறி பல கோடி ரூபாய் பணத்தை முதலீடு செய்ய வைத்து முதிர்வு காலம் முடிந்த நிலையில் எந்தப் பணத்தையும் திருப்பி தராமல் நம்பிக்கை மோசடி செய்ததாக மக்கள் கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை பொருளாதாரக்குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் உள்ளது. எனவே இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்கள் யாரேனும் இருப்பின் தாங்கள் சம்பந்தப்பட்ட அசல் ஆவணங்களுடன் சிவகங்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜராகி புகார் அளிக்கலாம் என்றார்.