அச்சுறுத்திய ரைடர்கள்
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் தீபாவளி நாளில் தெருக்களுக்குள் டூவீலர்களை ஓட்டி சிலர் மக்களை அச்சுறுத்தினர்.தீபாவளி பண்டிகையின் போது சிங்கம்புணரி மற்றும் சுற்று வட்டாரங்கள் சில பார்களில் விடிய விடிய மது விற்பனை நடந்தது.இந்நிலையில் தீபாவளியன்று காலை முதல் இரவு வரை போதை ஆசாமிகள் சிலர் தெருக்களுக்குள் ரேஸ் நடத்துவது போன்று டூவீலர்களை ஓட்டி மக்களை அச்சுறுத்தினர். வீடுகள் முன்பாக பட்டாசு வெடித்துக்கொண்டிருந்த சிறுவர்கள், பெண்கள் அவதிக்கு உள்ளாகினர்.பண்டிகை காலம் என்பதால் குறைந்த அளவு போலீசாரே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதனால் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை.நகரில் நேற்று நடந்த விபத்துகளில் 20க்கும் மேற்பட்டவர்கள் டூவீலர்களில் இருந்து விழுந்து காயம் அடைந்தனர். பண்டிகை காலங்களில் போதையில் டூவீலர் ஓட்டி பொதுமக்களை அச்சுறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.