உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளையான்குடி மருத்துவமனை செவிலியர்களுக்கு மிரட்டல்

இளையான்குடி மருத்துவமனை செவிலியர்களுக்கு மிரட்டல்

இளையான்குடி: இளையான்குடி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் புகை பிடித்தவர்களை கண்டித்த செவிலியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.இளையான்குடி அரசு மருத்துவமனையில் தினமும் 500க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாகவும், 20க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ஒரு கட்டடத்திலும் அருகில் ஒரு கட்டடத்திலும் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் இரவு நேர காவலாளி இல்லாத காரணத்தினால் நோயாளிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இரவில் குடிமகன்கள் மருத்துவமனைக்குள் புகுந்து நோயாளிகளிடமும், செவிலியர்களிடமும் தகராறு செய்து வருகின்றனர்.பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள மருத்துவமனை வளாகத்தில் உள்ள சேதமடைந்த கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ள நிலையில் காலியாக உள்ள அந்த இடத்தில் சிலர் வந்து புகை பிடிப்பதோடு சிறுநீரும் கழித்து வருகின்றனர்.மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர். நேற்று அப்பகுதியில் புகை பிடித்த ஒருவரை செவிலியர் ஒருவர் கண்டித்த போது அவர் செவிலியரை மிரட்டியதைத் தொடர்ந்து செவிலியர் மற்றும் ஊழியர்கள் இளையான்குடி போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ