உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்பாச்சேத்தி இரட்டை கொலை: 2 பேர் கைது

திருப்பாச்சேத்தி இரட்டை கொலை: 2 பேர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் குடும்பத்தகராறில் மாமியார், அவரது தாயாரை வாளால் வெட்டி கொலை செய்த இரு சகோதரர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.திருப்பாச்சேத்தி படமாத்துார் ரோட்டைச் சேர்ந்த மருதுபாண்டி மனைவி பாண்டிலட்சுமி 50. இவரது மகள் சோனியா 38. சோனியாவிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த மலைராஜ் மகன் பசுபதிக்கும் 40, திருமணம் நடந்தது. பசுபதி கூலித்தொழிலாளி ஆவார்.குடும்பப்பிரச்னையால் சோனியா கணவரை பிரிந்து சென்னையில் தனியாக வசிக்கிறார். விரக்தியில் இருந்த பசுபதி மாமியார் பாண்டிலட்சுமியிடம் இதுகுறித்து பேசுவதற்காக சகோதரர் அழகுசுந்தரத்தை 46, அழைத்து சென்றார். அப்போது வாய் தகராறு முற்றியதில் சகோதரர்கள் இருவரும் வாளால் பாண்டிலட்சுமி, அவரது தாய் சொர்ணமுத்து 80, ஆகியோரை வாளால் வெட்டி கொலை செய்து தப்பினர். திருப்பாச்சேத்தி போலீசார் விசாரித்து நேற்று பசுபதி உள்ளிட்ட இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை