உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பள்ளி அருகே புகையிலைக்கு தடை  பாதுகாப்பு மண்டலமாக அறிவிப்பு

பள்ளி அருகே புகையிலைக்கு தடை  பாதுகாப்பு மண்டலமாக அறிவிப்பு

சிவகங்கை:மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர், மேல்நிலை பள்ளி வளாகங்கள் அருகில் புகையிலை விற்பனைக்கு தடை விதிக்கப்பட்ட, பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மாவட்டத்தில் பள்ளி, கல்லுாரி வளாகத்திற்கு அருகில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை களை கட்டி வருகிறது. இந்நிலையில் கஞ்சா, கூல்லிப் போன்ற போதை வஸ்துகளும் எளிதில் மாணவர்களுக்கு கிடைப்பதாக புகார் எழுந்து வருகிறது.

பாதுகாப்பு மண்டலம்

இதையடுத்து அனைத்து உயர், மேல்நிலை பள்ளி வளாகத்திற்கு வெளியே தடை செய்யப்பட்ட புகையிலை, கஞ்சா, கூல்லிப் உள்ளிட்ட போதை பொருட்களை விற்பதை தடை செய்ய வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.பள்ளி வளாகத்தை சுற்றிலும், புகையிலை இல்லாத பாதுகாப்பு மண்டலம் என்ற விழிப்புணர்வு வாசகங்களை பள்ளி நுழைவு வாயில், ரோடுகளில் விளம்பரம் செய்துள்ளனர். போலீசாரும் புகையிலைக்கு தடை விதித்து மண்டலமாக அறிவித்துள்ள பள்ளி, கல்லுாரி பகுதிகளில் ரோந்து செல்வதன் மூலம் புகையிலை, கஞ்சா, கூல்லிப் போன்றவை விற்பனை செய்யாத பகுதி என உறுதி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி