உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  சந்தையில் தக்காளி விலை உயர்வு

 சந்தையில் தக்காளி விலை உயர்வு

சிவகங்கை: பருவமழை பெய்யத்துவங்கியதால் தக்காளி விளைச்சல் குறைந்த நிலையில் நேற்று சிவகங்கை சந்தையில் விலை அதிகரித்து ஒரு கிலோ ரூ.100க்கு விற்றது. சிவகங்கை வாரச்சந்தைக்கு மதுரை, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதியில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு விற்கப்படுகிறது. தற்போது பெய்து வரும் மழையால் தக்காளி அழுகி விடுகிறது. இதன் காரணமாக தக்காளி விலை உயர தொடங்கி உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். முதல் ரக தக்காளி கிலோ ரூ.100க்கும், இரண்டாம் ரக தக்காளி ரூ.80க்கும் விற்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஒரு கிலோ வாங்கும் இடத்தில் அரை கிலோ வாங்கும் சூழல் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை