உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  ந.வைரவன்பட்டியில் நாளை சூரசம்ஹாரம்

 ந.வைரவன்பட்டியில் நாளை சூரசம்ஹாரம்

திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே ந.வைரவன்பட்டி வள ரொளிநாதர், வயிரவசுவாமி கோயிலில் சம்பகசஷ்டி விழாவை முன்னிட்டு நாளை சூரசம்ஹாரம் நடைபெறும். நகரத்தார் கோயிலான இங்கு வயிரவர் சுவாமி, அம்பாள் சன்னதிகளுக்கு நடுவில் எழுந்தருளுகிறார். நவ.20ல் பூர்வாங்க பூஜை நடந்து, காப்புக்கட்டி விழா துவங்கியது. தொடர்ந்து நவ.21 முதல் தினசரி காலை 10:00 மணிக்கு ஹோமம், தீபாராதனை, இரவு 7:30 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு நடந்து வருகிறது. இன்று மாலை விடுதிக்கு சுவாமி எழுந்தருளி அஷ்டபைரவ அர்ச்சனை, தீபாராதனை நடைபெறும். இரவு 7:30 மணிக்கு ஊஞ்சலில் சுவாமி கோயில் வலம் வருவார். நாளை காலை 10:00 மணிக்கு வயிரவருக்கு அபிேஷக,ஆராதனை நடைபெறும். மாலையில் வயிரவர் எழுந்தருளி சம்பகாசூரசம்ஹாரம் நடைபெறும். இரவில் பஞ்சமூர்த்தி புறப்பாடு நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்