உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தடம் மாறிச் செல்லும் டவுன் பஸ்: மருத்துவமனை சந்தைக்கு செல்ல முடியாமல்... தவிப்பு

தடம் மாறிச் செல்லும் டவுன் பஸ்: மருத்துவமனை சந்தைக்கு செல்ல முடியாமல்... தவிப்பு

காரைக்குடி பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து உஞ்சனை அருகேயுள்ள மங்களத்திற்கு தினமும் டவுன் பஸ் இயக்கப்படுகிறது. காலை 6:30, 11:30 மாலை 5:30 ஆகிய மூன்று நேரங்களில் இயக்கப்படும் டவுன் பஸ், பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து புறப்படும். புது பஸ் ஸ்டாண்ட், பழைய மருத்துவமனை ரோடு, அரியக்குடி கேட் வழியாக மங்களம் வரை பஸ் சென்று வந்தது. இதன் மூலம், காரைக்குடி பழைய அரசு மருத்துவமனை, கணேசபுரம் சந்தை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் மக்கள் பயனடைந்து வந்தனர். இந்த டவுன் பஸ் தற்போது வழித்தடம் மாறி, காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டிலிருந்து, 100 அடி ரோடு, ரயில்வே ரோடு வழியாக செல்கிறது. இதனால் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், வயதானவர்கள் சந்தைக்கு செல்லும் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே முறையான வழித்தடத்தில் டவுன் பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது. காரைக்குடி, செப். 21- காரைக்குடியில் இருந்து மங்களம் செல்லும் டவுன் பஸ் வழித்தடம் மாறி செல்வதால் மருத்துவமனை மற்றும் சந்தைக்கு செல்ல முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி