உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / எடை தராசுகளை புதுப்பிக்க முடியாமல் வியாபாரிகள் தவிப்பு

எடை தராசுகளை புதுப்பிக்க முடியாமல் வியாபாரிகள் தவிப்பு

திருப்புத்துார்: திருப்புத்துாரில் தற்போதும் சில்லறை வியாபார மளிகைக்கடை, காய்கறிக்கடை உள்ளிட்ட கடைகளில் பயன்பாட்டில் எடைக்கல் தராசு உள்ளது. இந்த தராசை பயன்படுத்த வாங்கிய 2 ஆண்டுகளுக்கு பின் ஆண்டு தோறும் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். முன்பு திருப்புத்துாரில் இருந்த தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகத்தில் புதுப்பிக்க முடிந்தது. தினசரி வியாபாரிகள் சென்று புதுப்பித்து வந்தனர். தற்போது அங்கு பணியாளர் இல்லாததால் புதுப்பிக்கும் பணி நடைபெறுவதில்லை. சிவகங்கையில் உள்ள மாவட்ட அலுவலகத்திற்கு சென்று வியாபாரிகள் புதுப்பிக்க வேண்டியுள்ளதால் வியாபாரிகளுக்கு சிரமமாக உள்ளது. முன்பு மூன்று மாதத்திற்கு ஒரு முறை திருப்புத்துார் அலுவலகத்தில் புதுப்பிக்கும் முகாம் நடைபெறும். ஆனால் முகாம் நடைபெறுவது குறித்து முன்னறிவிப்பு இல்லாததால் வியாபாரிகள் புதுப்பிக்க முடியாமல் உள்ளனர். மாதந்தோறும் குறிப்பிட்ட நாளில் புதுப்பிக்கும் முகாம் திருப்புத்துார் அலுவலகத்தில் நடத்த வேண்டுமென வியாபாரிகள் கோரியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி