உள்ளூர் செய்திகள்

பயிற்சி பட்டறை

காரைக்குடி; காரைக்குடி அழகப்பா பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் மற்றும் உள்தர நிர்ணய உறுதி குழு சார்பில் நிர்வாகப் பணியாளர்களுக்கு மின்னணு மதிப்பீட்டு முறைக்கான பயிற்சி பட்டறை நடந்தது. தேர்வாணையர் ஜோதிபாசு வரவேற்றார். துணைவேந்தர் க. ரவி தலைமையேற்று பேசினார். துணை தேர்வாணையர் அருண் கருத்துரை வழங்கினார். ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ராஜாராம், பல்கலை பதிவாளர் செந்தில்ராஜன் வாழ்த்தினர். உள்தர நிர்ணய உறுதி குழு இயக்குனர் அலமேலு நன்றி கூறினார். பாரதிதாசன் பல்கலை தொழில்நுட்பவியலாளர் பாலசுப்பிரமணியன் அழகப்பா பல்கலை தொலைநிலை கல்வி மைய ஆலோசகர் குருமூர்த்தி தொழில்நுட்பவியலாளர்கள் பாண்டிமுத்து, சிலம்பரசன், கண்ணன் பயிற்சி வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை