உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காக்குடியில் டிரான்ஸ்பார்மர் பழுது

காக்குடியில் டிரான்ஸ்பார்மர் பழுது

மானாமதுரை: மானாமதுரை அருகே காக்குடி கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பார்மர் பழுதால்ஏற்படும் மின்தடை மற்றும் குறைந்தழுத்த மின்சாரத்தால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மேலநெட்டூர் ஊராட்சிக்குஉட்பட்ட காக்குடி கிராமத்தில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள விவசாயிகள் இலவச மின் இணைப்புகள் மூலம் மின் மோட்டார்களை கொண்டு நெல், வாழை, கரும்பு உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டதை தொடர்ந்து மேலநெட்டூர் கிராமத்தில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதால் காக்குடி கிராமத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் குறைந்தழுத்த மின்சாரமே வருவதினால் விவசாயிகள்அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மேலநெட்டூர் கிராமத்திலும் இதே போன்ற பிரச்னை நீடிப்பதால் அப்பகுதி மக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். ஆகவே மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக இப்பகுதிகளில் உள்ள டிரான்ஸ்பார்மர்களை சரி செய்ய வேண்டுமென்று விவசாயிகளும், கிராம மக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ