உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடியில் மாற்று இடம்  திருநங்கைகள் மனு 

காரைக்குடியில் மாற்று இடம்  திருநங்கைகள் மனு 

சிவகங்கை,: காரைக்குடியில் 25 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர். அவர்களில் சிலருக்கு ஆவுடைப்பொய்கை என்ற இடத்தில் வீட்டு மனை வழங்கினர். இந்த இடத்தில் வீடுகளை கட்ட தொடங்கிய திருநங்கைகளுக்கு, மின்வாரியம் மூலம் தடை வந்தது. இவர்களுக்கு வழங்கிய நிலத்திற்கு மேல் உயரழுத்த மின் கம்பிகள் செல்வதால், கீழே வீடுகள் கட்ட அனுமதியில்லை என மின்வாரியம் அவர்களுக்கு தடை விதித்துள்ளது. வீடுகள் கட்ட முடியாமல் திருநங்கைகள் தவித்து வருகின்றனர். அதே போன்று மாவட்ட அளவில் வசிக்கும் திருநங்கைகளில் வீட்டு மனை இல்லாதவர் களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபியிடம் மனு அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !