உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  பள்ளி அருகே மரம் விழுந்து அறுந்த மின்கம்பிகள்

 பள்ளி அருகே மரம் விழுந்து அறுந்த மின்கம்பிகள்

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் மழை காரணமாக பள்ளி அருகே இருந்த மரம் விழுந்ததில் மின்கம்பி அறுந்து தொங்கியது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்யத் துவங்கியுள்ள நிலையில், சிங்கம்புணரியில் மேலுார் ரோட்டில் உள்ள அரசு துவக்கப் பள்ளி எண் 2 முன்பாக மரக்கிளை நேற்று உடைந்து விழுந்தது. இதில் அருகே சென்ற மின்கம்பிகளும் அறுந்து விழுந்தது. பள்ளி பூட்டியிருந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதை தொடர்ந்து அவ்வழியாகச் சென்ற வர்கள் தகவல் அளித்ததை தொடர்ந்து சிங்கம்புணரி பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து, துணைத் தலைவர் செந்தில் ஆகியோர் துப்புரவுப் பணியாளர்கள் உதவியுடன் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். உடனடியாக மரக் கிளைகள் வெட்டி அகற்றப் பட்டு, மின் இணைப்பு சரி செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ