உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தேரோடும் வீதிக்கு சிக்கல்

தேரோடும் வீதிக்கு சிக்கல்

மானாமதுரை : மானாமதுரை தேரோடும் வீதியில் உயர்வாக கால்வாய் கட்டப்படுவதால், தேரோட்டத்தின் போது பாதிப்பு ஏற்படும் என தெரிவித்தனர். மானாமதுரை வைகை ஆற்று கரையில் ஆனந்தவல்லி, சோமநாதர் கோயில் உள்ளது. இங்கு சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. மார்கழியில் சிறிய அளவில் சப்பர தேரோட்டமும் நடக்கும். தேரோட்டத்தின் போது நான்கு ரத வீதிகளை சுற்றி வர வேண்டும். இந்நிலையில் கோயிலுக்கு அருகே கால்வாய் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த கால்வாய் ரோட்டை விட உயரமாக கட்டியுள்ளதால், தேரோட்டத்தின் போது சிரமம் ஏற்படும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். நகராட்சி நிர்வாகம் தேரோட்டத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கால்வாய் பாலம் கட்ட வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி