/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரேஷன் அரிசி கடத்திய லாரி டயர் வெடித்து கவிழ்ந்தது: 60 மூடை அரிசி பறிமுதல்
ரேஷன் அரிசி கடத்திய லாரி டயர் வெடித்து கவிழ்ந்தது: 60 மூடை அரிசி பறிமுதல்
மானாமதுரை: மானாமதுரை அருகே ரேஷன் அரிசி கடத்திச் சென்ற மினி லாரி டயர் வெடித்ததில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கடத்திச் சொல்லப்பட்ட 60 மூடைகளில் இருந்த 2500 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் கைப்பற்றி கோடவுனுக்கு அனுப்பினர்.ராமநாதபுரத்தில் இருந்து மதுரைக்கு சென்ற மினி லாரி மானாமதுரை அருகே பாப்பாமடை பெட்ரோல் பங்க் அருகே டயர் வெடித்து ரோடு ஓரமாக கவிழ்ந்தது. லாரியை ஒட்டி வந்த டிரைவர் தப்பினார். அப்பகுதியில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார் மற்றும் மானாமதுரை போலீசார், உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கவிழ்ந்து கிடந்த லாரியில் 60 மூடைகளில் இருந்த 2500 கிலோ கடத்தல் ரேஷன் அரிசியை கைப்பற்றி நுகர்பொருள் வாணிப கோடவுனுக்கு அனுப்பி வைத்தனர்.