உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / உண்டியலில் திருட்டு இருவர் கைது

உண்டியலில் திருட்டு இருவர் கைது

இளையான்குடி: இளையான்குடி வாள் மேல் நடந்த அம்மன் கோயிலில் உண்டியலை உடைத்து திருடிய வழக்கில் 2 பேர் கைதாகினர். இளையான்குடி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள வாள்மேல் நடந்த அம்மன் கோயிலில், ஆக., 9 ம் தேதி இரவு உண்டியல் உடைக்கப்பட்டு திருட்டு நடந்தது. போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவினை ஆய்வு செய்து, உண்டியலில் திருடியதாக திருவாரூர் மாவட்டம், இடையூரை சேர்ந்த முருகானந்தம் 45, இளையான்குடி பகிரா தெரு துல்கருணை 41, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை