மேலும் செய்திகள்
பழனிசாமி கூட்டத்திற்கு வந்தவர் விபத்தில் பலி
02-Sep-2025
பைக் - அரசு பஸ் மோதல் இரண்டு பேர் பரிதாப பலி
11-Sep-2025
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே இரு வேறு இடங்களில் நடந்த சாலை விபத்தில் டூவீலரில் சென்ற இரு வாலிபர்கள் இறந்தனர். திருப்புத்துார் ஒன்றியம் சுண்ணாம்பிருப்பு நாகராஜன் மகன் சுதர்சன நாச்சியப்பன்22. இவர் தனியார் கடையில் வேலை செய்கிறார். நேற்று காலை 10:00 மணிக்கு சுண்ணாம்பிருப்பிலிருந்து அருகிலுள்ள கருப்பூருக்கு டூ வீலரில் சென்றார். (ஹெல்மெட் அணியவில்லை) மதுரை ரோட்டில் செல்லும் போது மதுரையிலிருந்து தஞ்சாவூர் சென்ற அரசு பஸ் டூ வீலர் மீது மோதியது.அதில் பலத்த காயமடைந்த சுதர்சனநாச்சியப்பன் இறந்தார். திருப்புத்துார் போலீசார் விசாரிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு 7:00 மணி அளவில் பிள்ளையார்பட்டி சங்கர நாராயணன் மகன் அஜய்21 நெடுமரத்திலிருந்து திருப்புத்துாருக்கு டூவீலரில் வந்து கொண்டிருந்தார். ஜெயமங்கலம் விலக்கு ரோடு அருகில் செல்லும் போது அடையாளம் தெரியாத வாகனம் டூ வீலர் மீது மோதியுள்ளது. அதில் காயமடைந்த அஜய் இறந்தார். திருப்புத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
02-Sep-2025
11-Sep-2025