உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இரு சக்கர வாகன ஓட்டுனர்களே உஷார் டிராபிக் வயலன்ஸ் என பண மோசடி

இரு சக்கர வாகன ஓட்டுனர்களே உஷார் டிராபிக் வயலன்ஸ் என பண மோசடி

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை, காரைக்குடி பகுதிகளில் இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு 'டிராபிக் வயலன்ஸ்' இருப்பதாக குறுஞ்செய்தி அனுப்பி பணம் பறிப்பு சம்பவம் அரங்கேறியுள்ளது. பணமோடியை தடுக்க அரசும் ரிசர்வ் வங்கியும் பல வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் மோசடிக்காரர்கள் புதுப்புதுவிதங்களில் தங்கள் செயல்பாடுகளை மாற்றுகின்றனர். அப்படி ஒரு மோசடி சிவகங்கை மாவட்டத்தில் நடந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, காரைக்குடி சுற்றுப்பகுதிகளில் மட்டும் நுாற்றுக்கும் மேற்பட்ட டூவீலர், கார் வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் வந்துள்ளது. அதில் தங்கள் வாகனத்தின் மீது 'டிராபிக் வயலன்ஸ்' வழக்கு இருப்பதாகவும், உடன் அபராதம் செலுத்துமாறும் செலுத்த தவறினால் பல மடங்கு அபராதம் அதிகரிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அபராத தொகை ரூ.1000, 5 ஆயிரம், 10 ஆயிரம் என தொகையையும், அபராதம் கட்டவேண்டிய தேதி (அன்றைய தினம்), கட்ட வேண்டிய செலான் நம்பர் உட்பட அனைத்தையும் குறிப்பிட்டு, பணம் செலுத்துவற்கான லிங்க் ஒன்றையும் இணைத்துள்ளனர். அதை தொட்டதும் அபராத தொகை ஸ்கிரீனில் தெரிகிறது. பணமும் எடுக்கப்படுகிறது. கொஞ்சம் கூட சந்தேகம் வராத விதத்தில் உள்ள இந்த குறுஞ்செய்தியை பார்த்து பலர் பணம் கட்டியுள்ளனர். நேற்று அதிகாலை ஒருவர் வீட்டை விட்டு வெளியே வரும் முன்பே அபராத மெசேஜ் வந்துள்ளது. அந்த நபர் டிராபிக் எஸ்.ஐ.,யை அணுகி கேட்டுள்ளார். அப்போது அவரும் நானும் வரவில்லை. அபராதம் விதிக்கும் கருவியை இன்னும் ஆன் செய்யவில்லை என்று பதிலளித்தார். இதனைத் தொடர்ந்து அது போலியான தகவல் என தெரியவந்தது. இந்த புதுவித மோசடியால் நேற்றும், நேற்று முன் தினமும் காரைக்குடி, தேவகோட்டை பகுதிகளில் பலர் பணத்தை இழந்தது தெரியவந்துள்ளது. இந்த புது மோசடி குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க துவங்கியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை